jump to navigation

Workrave – புதுமையான செயலி ஏப்ரல் 26, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் எற்படும் ரிப்பிடிடிவ் ஸ்ரெய்ன் இஞ்சுரி (RSI)யை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி – Workrave.

வர வர எதுக்குத்தான் மென்பொருள் எழுதுவதுனு இல்லாமா போச்சு !!!!!!

Technorati Tags:

ஐபிஎம் திங்பேட் (Thinkpad) விக்கி பக்கம் மார்ச் 21, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

நீங்கள் ஐபிஎம் திங்பேடை உபயோகிப்பவராக இருந்தால், இந்த விக்கிப்பக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். சில வருடங்களாக பயனில் இருக்கும் இந்த விக்கியில், ஐபிம் திங்பேட் சம்பந்தமான அனைத்து விபரங்களும் இருக்கிறது.நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகித்தால், இந்த தேடுதல் பொறி ஒரு போனஸ்.

உ. வே. சா தொகுத்த சங்கநூல் சிடி-க்கள் வெளியீடு மார்ச் 9, 2006

Posted by இளங்கோ in செய்திகள்.
add a comment

இன்றைய தினமணியில் வந்துள்ள செய்தி.

'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத ஐயர் தேடிக் கண்டறிந்த சங்க நூல் ஓலைச் சுவடிகளின் ஒளிப் படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள், குறுந்தகடுகள் (சி.டி) வெளியிடப்படுகின்றன.

உ.வே.சா நூல்நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி சென்னை மயிலை பாரதீய வித்யாபவனில் மார்ச் 11ம் தேதி மாலை நடைபெறுகிறது.

இலவச மின்புத்தகம் மார்ச் 3, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
2 comments

Que பதிப்பகம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு பற்றிய ஒரு மின்புத்தகத்தை இலவசமாக இந்த சுட்டியில் தருகிறார்கள்..Technorati Tags: , ,

மைக்ரோசாப்ட் விண்டோஸ் விஸ்டா அறிவிப்பு பிப்ரவரி 28, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

மைக்ரோசாப்ட் தனது அடுத்தகட்ட இயங்கும் தளமான விண்டோஸ் விஸ்டா வகைப்பாடுகளை அறிவித்துள்ளது. விண்டோஸ் விஸ்டா ஐந்து விதமாக வெளியிடப்படுகிறது..சாதாரண உபயோகத்திற்கு (Home Editions):

  • Windows Vista Home basic
  • Windows Vista Home Premium
  • Windows Vista Ultimate

அலுவலக உபயோகத்திற்கு (Business Editions):

  • Windows Vista Business
  • Windows Vista Enterprise

Technorati Tags: ,

பிப்ரவரி 2006 – மைக்ரோசாப்ட் பாதுகாப்பு செய்திகள் பிப்ரவரி 27, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

இரு வாரங்களுக்கு முன் (14-பிப்ரவரி), மைக்ரோசாப்ட் 7 விண்டோஸ் செயலிக்கான பாதுகாப்பு மாற்றங்களை வெளியிட்டது. இதன் விபரம் தரவரிசைப்படி கிழே தரப்பட்டுள்ளதுஅவசியமான கோப்புக்கள்

முக்கியமான கோப்புக்கள்

நீங்கள் விண்டோஸ் கணனி உபயோகப்படுத்தினால், இந்த பாதுகாப்பு செயலிகளை நிறுவ மறக்காதீர்.

விண்டோஸ் XP-யை வேகப்படுத்துங்கள் பிப்ரவரி 21, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

விண்டோஸ் XP-யை வேகப்படுத்தும் சில எளிய வழிமுறைகள் இந்த வலைப்பக்கத்தில்(ActiveHowTo.com). இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல வழிமுறைகள் விண்டோஸ் ரெஜிஸ்டரியை மாற்றம் செய்ய கோரும், எனவே சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

Flock 0.6.0 வெளியிடப்பட்டுள்ளது பிப்ரவரி 15, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

Flock – திறமூல உலவியின் புதிய வடிவம் (0.5.10.0) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயலியின் பயன்பாடுகள்

  • ப்ளிக்கர் புகைப்பட மேலேற்றும் உதவி
  • புகைப்பட வகைப்படுத்தும் உதவி
  • மேம்பட்ட வலைப்பதிவு உதவி

இந்த புதிய உதவியை நிறுவும்முன் யோசிக்கவும், எனென்றால் உங்களது முந்தைய மாற்றங்களை (personal profile, extensions) இழக்க நேரிடும்

technorati tags:

பயர்பாக்ஸ் 1.5.0.1 தொகுப்பு பிப்ரவரி 2, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

பயர்பாக்ஸ் 1.5.0.1 தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளதுபயர்பாக்ஸ் – பிரபல திறமூல செயலியின் புதிய வடிவம் 1.5.0.1 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியிடு பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கானது என்பதால் பயர்பாக்ஸ் செயலி பயன்படுத்துபவர்கள் உடனே நிறுவுவது நலம்.

எச்சரிக்கை: இந்த தொகுப்பை நிறுவுவதால் உங்களது சில extensions வேலை செய்யாமல் போகலாம்.

Flock – புதிய சமூக உலவி ஜனவரி 31, 2006

Posted by இளங்கோ in கணிப்பொறி.
add a comment

தற்போது இணையத்தில் உலவ நான் பயன்படுத்தும் செயலி – Flock.இரண்டாம் தலைமுறை இணைய செயலிகளின் (web 2.0) தொகுப்பில் இந்த செயலி ஒர் முக்கிய பங்குவகிக்கும் எனத் தோன்றுகிறது. பயர்பாக்ஸ் செயலித்தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த உலவி, பல்வேறு சமூக தொடர்பு (Social Computing) பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. வெகுநாட்களாக, பயர்பாக்ஸ் செயலியை பயன்படுத்தி வந்த நான், தற்போது Flock-க்கு மாறியுள்ளேன்.

மாற்றத்திற்குரிய முக்கிய காரணங்கள்:

  • இரண்டாம் தலைமுறை உலவி (Web 2.0 browser)
  • உலவியிலிருந்து வலைப்பதிவு செய்யும் வசதி (weblogging component)
  • del.icio.us உடன் இணைப்பு
  • ப்ளிக்கர் (Flicker) உடன் இணைப்பு
  • பயர்பாக்ஸ் செயலியை மூலமாக கொண்டதால் அதன் பயன்பாடுகள்
Follow

Get every new post delivered to your Inbox.